Archives: ஜூலை 2020

முற்றிலும் நம்மைத் துடைக்கும் கிருபை

ஒலி வாயிலாக கட்டுப்படுத்தப்படும் அமெசான் சாதனமான அலெக்சா, ஆர்வமளிக்கக் கூடிய ஓர் அம்சத்தைக் கொண்டுள்ளது.  அதாவது, அதில் கூறியுள்ள அனைத்து செய்திகளையும் அழித்துவிடலாம். அலெக்சாவைச் செய்யும்படி கூறியுள்ள அனைத்தையும், அதனிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்ட அனைத்துச் செய்திகளையும் அழித்து விடலாம். ஓர் எளிய வாக்கியத்தால் (“நான் இன்று கூறிய அனைத்தையும் அழித்துவிடு”) அனைத்தையும் சுத்தமாக அழித்துவிடலாம், அது அங்கு இருந்தது என்பதற்கான அடையாளமேயில்லாமல் அழிக்கமுடியும். ஆனால்  நாம் தவறாகப் பேசிய வார்த்தைகளும்,  நம்முடைய ஒவ்வொரு கருணையற்ற செயலும், நாம் மறந்து விட நினைக்கும் நிகழ்வுகள் அனைத்தும், நாம் கூறும் ஒரே கட்டளையின் மூலம் அழித்து விட முடியும் என்ற வசதி நம்முடைய வாழ்க்கையில் இல்லை என்பது எத்தனை மோசமானது!

ஆனால் நமக்கு ஒரு நற்செய்தி உள்ளது. நாம் அனைவரும் ஒரு புதிய, தூய்மையான துவக்கத்தை ஆரம்பிக்க தேவன் நம்மை அழைக்கின்றார். அவர் நம்முடைய தவறுகளையும், கெட்ட பழக்கங்களையும் வெறுமனே நீக்குகிறவர் மட்டுமல்ல, அவர் இன்னும் ஆழமாகச் செல்கின்றார். அவர் நம்மை மீட்டு, முழுவதும் மாற்றும்படி ஆழமாக கழுவுகின்றார், நம்மை முற்றிலும் மாற்றி புதியதாக்குகின்றார். “என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்” (ஏசா.44:22) என்கின்றார். இஸ்ரவேலர் கலகம் பண்ணி, கீழ்படியாமல் போனபோதும், தேவன்  மிகுந்த இரக்கத்துடன் அவர்களுக்கு இரங்கினார். அவர்களின் “மீறுதல்களை மேகத்தைப் போலவும், (அவர்களின்) பாவங்களை கார்மேகத்தைப் போலவும்” (வ.22) அகற்றிவிட்டார். அவர்களுடைய அவமானங்களையும், தோல்விகளையும் சேர்த்து, அவற்றை  அவருடைய ஆழ்ந்த கிருபையினால் துடைத்து விட்டார்.

தேவன் நம்முடைய பாவங்களையும், தவறுகளையும் அவ்வாறே செய்கின்றார். அவரால் சரி செய்யக்கூடாத தவறு ஒன்றுமேயில்லை, அவரால் குணமாக்க முடியாத காயமுமில்லை. நம்முடைய ஆத்துமாவின் வேதனை நிறைந்த பகுதிகளை தேவனுடைய இரக்கம் சுகப்படுத்துகின்றது, நாம் இதுவரை மறைத்து வைத்திருந்த காரியங்களையும், நம்முடைய குற்ற உணர்வுகளையும், நாம் மனம் வருந்தும் அனைத்து காரியங்களையும் அவருடைய இரக்கம் முற்றிலும் கழுவி சுத்தப் படுத்துகின்றது.

ஒரு ராஜரீக பங்கு

ராஜ பரம்பரையில் முடிசூட்டப்படுவதற்கு தயாராக இருக்கும் ஒருவரைக் குறித்து பொதுமக்கள் அதிகமாக அறிந்துகொள்ள ஆர்வமாக இருப்பர். மற்றவர்களை மறந்துவிடுவர். பிரிட்டன் அரச குடும்பத்தின் வரிசையில், கிட்டத்தட்ட அறுபது பேர் அரியணையில் ஏறினர். அவர்களில் ஒருவரான ஃப்ரெட்ரிக் வின்சர், அந்த வரிசையில் நாற்பத்தொன்பதாவது இடத்தில் வந்தார். அவர் தன்னைப் பொது மக்களின் பார்வைக்கு காண்பிப்பதை தவிர்த்து, தன்னுடைய வாழ்க்கை முறையை முழுமையாகத் தொடர்ந்தார், அவர் பொருளாதார நிபுணராகப் பணிபுரிந்தார். “பணிபுரியும் ராஜபரம்பரையினராக” அவரை- அரச பரம்பரையிலுள்ள முக்கியமான நபரான அவருக்கு, அக்குடும்பத்தில் அங்கம் வகிப்பதற்கான சம்பளத்தை வழங்கவில்லை.

தாவீதின் மகனான நாத்தான் (2 சாமு.5:14) அரச குடும்பத்தைச்    சேர்ந்தவன், ஆயினும் மக்களின் பார்வைக்கு வெளியே இருந்தான். அவனைக் குறித்து சிறிதளவே கூறப்பட்டள்ளது. ஆனால், மத்தேயு சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில், தாவீதின் மகனான சாலமோன் (யோசேப்பின் வம்சத்தில், மத்.1:6) குறிப்பிடப்பட்டுள்ளார். லூக்காவில் குறிப்பிடப்பட்டுள்ள வம்ச வரலாறு மரியாளின் வம்சத்தைக் குறிக்கின்றது, அதில் நாத்தானின் பெயர் வருகின்றது (லூக். 3:31). நாத்தான் அரச செங்கோலைப் பிடிக்கவில்லையெனினும், நிலையான தேவனுடைய இராஜியத்தில் ஒரு பங்கினைப் பெறுகின்றான்.

 கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாமும் ராஜரீகத்தைப் பெறுகின்றோம். அப்போஸ்தலனாகிய யோவான், “தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவா.1:12) என எழுதுகின்றார். நாம் அனைவராலும் கவனிக்கப் படுகின்றவர்களாக இல்லையெனினும், நாம் தேவனுடைய பிள்ளைகள்! நாம் தேவனை பிரதிபலிக்கின்றவர்களாக இவ்வுலகில் வாழும்படி தேவன் நம்மை வைத்துள்ளார். ஒரு நாள் நாம் அவரோடு கூட அரசாளுவோம் (2 தீமோ.2:11-13). நாத்தானைப் போன்று நாமும் உலகை ஆளும் கிரீடத்தை பெறாமலிருக்கலாம், ஆனால் நாம் தேவனுடைய ராஜியத்தில் அவரோடு கூட ஆளுகை செய்யும் பங்கினைப் பெறுவோம்.

எப்படி காத்திருப்பது?

ஆலயத்தைக்குறித்து விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த, பதினேழு வயது நிரம்பிய தாமஸ், அநேக ஆண்டுகளாக வைத்திருந்த கேள்விகளுக்கு விடையைத் தேடினான். அவனுடைய தேடலின் பயனாக, அவனுடைய ஏக்கங்களுக்கு தீர்வோ அல்லது அவனுடைய கேள்விகளுக்கு பதிலோ கிடைக்கவில்லை.

அவனுடைய பயணம், அவனை அவனுடைய பெற்றோருக்கு அருகில் கொண்டுவந்தது. ஆயினும் அவனுக்குள் கிறிஸ்தவத்தைக் குறித்து அநேக சந்தேகங்கள் இருந்தன. ஒரு சம்பாஷணையின் போது, அவன், “வேதாகமம் முழுவதும் வெறுமையான வாக்குத்தத்தங்களால் நிறைந்திருக்கின்றது” என்று வருத்தத்தோடு கூறினான்.

மற்றொரு மனிதன் ஏமாற்றத்தையும், கஷ்ட நேரத்தையும் சந்தித்தபோது, இவனுடைய சந்தேகங்களை இன்னும் தூண்டியதைப்போல ஆயிற்று. ஆனால், தன்னைக் கொல்ல நினைத்த எதிரிகளிடமிருந்து தப்பி ஓடிய தாவீது, தேவனை விட்டு ஓடிவிட எண்ணவில்லை, மாறாக அவன் தேவனைத் துதித்தான். “என் மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாய் இருப்பேன்” (சங்.27:3) என்று பாடுகின்றார்.

ஆயினும், தாவீதின் பாடல், அவனுக்குள் இருந்த சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றது. அவன், “எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச் செய்யும்” (வ.7) என்று கதறுகின்றான், இது பயத்தால்  நிறைந்த மனிதனின் கேள்விகளைப் போன்று உள்ளது. “உமது முகத்தை எனக்கு மறையாதேயும்,…… தேவனே, என்னை  நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்” (வ.9) என்று கெஞ்சுகின்றான்.

தாவீதின் சந்தேகங்கள் அவனை முடக்கி விடவில்லை. அந்த சந்தேகங்களின் மத்தியிலும், “நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்” (வ.13) என்கின்றான்.  பின்னர், அவர் வாசகர்களை நோக்கி: உன்னையும், என்னையும், இவ்வுலகில் தாமஸ்ஸைப் போன்றுள்ளோரையும் நோக்கி, “கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், திடமனதாயிருந்து கர்த்தருக்கே காத்திரு” (வ.14) என்கின்றார்.

நம்முடைய பெரிய கேள்விகளுக்கு உடனடியாக, எளிய பதில் வரும் என எதிர் பார்க்க முடியாது. ஆனால், நாம் தேவனுக்கு காத்திருக்கும் போது, பதில் நிச்சயம் வரும். அவர் நம்பிக்கைக்குரிய தேவன்.

நம்முடைய இருதயங்களிலே

ஓர் இளைஞன் பள்ளியில் சில பிரச்சனைகளைச் சந்தித்தபோது, அவனுடைய தந்தை அவனுக்கு ஓர் உறுதி மொழியைக் கற்றுக் கொடுத்தார், அதனை அவன் ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு சொல்லுவான், “தேவனே, இன்று காலை, என்னை எழுப்பினதற்காக உமக்கு நன்றி கூறுகின்றேன். நான் கற்றுக் கொள்வதற்காகவும் பிறரை வழி நடத்துவதற்காகவும் பள்ளிக்குச் செல்கிறேன்………………. அதற்காகவே, .தேவன் என்னைத் படைத்தார்” என்று சொல்லுவான். இந்த உறுதி மொழியின் மூலம் அந்த தந்தை, அந்த இளைஞனுக்கு நம்பிக்கையைக் கொடுத்ததோடு, வாழ்க்கையில் வரும் தவிர்க்கமுடியாத சவால்களைச் சந்திக்க தைரியத்தையும் கொடுத்தார்.

 இந்த உறுதிமொழியை தன்னுடைய மகன், மனதில் வைத்துக் கொள்ள உதவிய தந்தை, வனாந்தரத்தில் பயணம் செய்த இஸ்ரவேலருக்கு தேவன் கற்பித்த கட்டளையை, ஒரு வகையில் நிறைவேற்றுபவராக காணப்படுகின்றார். “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது, நீ அவைகளை உன் பிள்ளைகளுக்கும் கருத்தாய் போதி” (உபா.6:6-7).

இஸ்ரவேலர், நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தில் பயணம் செய்தனர், அவர்களின் அடுத்த தலைமுறையினர் தான், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தைச் சுதந்தரிக்கப் போகின்றனர், அந்த இளைய தலைமுறையினரின் கண்களும் தேவனை நோக்கி     இருந்தாலன்றி, அவர்களாலும் வெற்றியடைய முடியாது என்பதை தேவன் அறிவார். எனவே, மோசேயின் மூலமாக தேவன் அவர்களுக்கு நினைவு படுத்துகின்றார். தேவனுக்கு கீழ்ப்படியவும், தேவனை நேசிக்கவும், தேவனுடைய வார்த்தைகளை அவர்களின் பிள்ளைகளும் அறிந்து கொள்ளும்படி செய்யவும், “நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக் கொள்ளுகிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு” (வ.7) என்கின்றார்.

ஒவ்வொரு புதிய நாளிலும், தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் நாம் வாழும்படி நம்மை அர்ப்பணித்து, வேத வார்த்தைகள் நம்முடைய இருதயத்தையும், மனதையும் வழி நடத்தும்படி அவரிடம் நம்மைக் கொடுப்போமாக.